பிரபல நடிகர் ஒருவர் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் முதல் நாள் முதல் காட்சியிலேயே ஐஸ்வர்யாராயுடன் நடித்ததை நம்பமுடியவில்லை என தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டார்.
பல சிக்கல்களுக்கு பிறகு தற்போது தான் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என தெரிய வருகிறது.
அதற்கு காரணம் சரித்திர படம் என்பதால் அளவுக்கதிகமான கூட்டத்தை வைத்து படமாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து படக்குழுவினர் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்புதான் அண்ணாத்த படப்பிடிப்பில் கொரோனா தொடர் பரவியது குறிப்பிடத்தக்கது.
மணிரத்தினத்தின் சினிமா கேரியரில் மிகப் பிரம்மாண்ட படமாக உருவாகி வருகிறது பொன்னியின் செல்வன். இதில் இந்திய சினிமாவின் பல நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர். ஜெயம் ரவி, விக்ரம் கார்த்தி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஐஸ்வர்யா ராய் மற்றும் அமிதாப் பச்சனும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் மற்றொரு நடிகரான ரகுமான் தன்னுடைய முதல் நாள் முதல் காட்சி பற்றிய அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
ஐஸ்வர்யாராயுடன் நடிப்பேன் என கனவுகூட காணவில்லை எனவும் படக்குழுவினரின் வேண்டுகோளுக்கிணங்க புகைப்படங்களை பகிர முடியவில்லை எனவும் கொஞ்சம் வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார். ரகுமான் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.