லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் மாஸ்டர் படமானது தற்போது திரையரங்கில் வெளியாகி தாறுமாறான வசூலை குவித்து வருகிறது. சென்ற வருடம் ஏப்ரல் மாதத்திலேயே திரையிடப்பட விருந்த மாஸ்டர் படம் கொரோனோ அச்சுறுத்தலின் காரணமாக 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரையிடப்பட்டு,தற்போது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த சமயத்தில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து, 66 வது படத்திலும் மீண்டும் லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணி இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே விஜய்யின் 66 வது படத்தை லலித் குமார் தயாரிக்கவிருக்கிறார்.
மேலும் விஜய்யின் 65 வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து, இயக்குனர் நெல்சன் திலீப் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இது கோலிவுட்டின் கிசு கிசுப்பு தான், ஆனாலும் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகுமாம்.
ஆகையால் லோகேஷ் கனகராஜ் தற்போது மாஸ்டர் படத்தை தொடர்ந்து கமலின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். எனவே இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் தளபதியின் 66வது படத்தை பற்றிய தகவல்களை லோகேஷ் கனகராஜ் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர்ஹிட் படங்களை தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்க முடிவெடுத்து விட்டார் என தளபதி ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர்.