முன்னரெல்லாம் நடிகர்கள்தான் தங்களை விட வயது குறைவான நடிகைகளுடன் நடிக்க ஆர்வம் காட்டி வந்த நிலையில் தற்போது முன்னணி நடிகைகளும் தங்களை விட வயது குறைவான நடிகர்களுடன் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதற்கு காரணம் மார்க்கெட்டை பிடிக்கும் ராஜதந்திரம் தான். நயன்தாரா கூட முதலில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வந்த நிலையில், திடீரென இடம் நடிகர்களுடனும், ஒரு சில படங்களில் நடித்த நடிகர்களுடனும் ஜோடி போட்டார்.
உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் படங்களில் ஒன்றுக்கு இரண்டு முறை ஜோடி போட்டு தன்னுடைய மார்க்கெட்டை காப்பாற்றிக் கொண்டார். தற்போது அதே வேலையைத்தான் நடிகை சமந்தாவும் செய்ய உள்ளாராம்.
நடிகை சமந்தா(33) அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தில் தன்னை விட 5 வயது குறைவான மலையாள நடிகர் தேவ் மோகன்(28) என்பவருக்கு ஜோடியாக அடுத்த படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை ருத்ரமாதேவி படத்தை இயக்கிய குணசேகர் என்பவர் இயக்க உள்ளாராம்.

சரித்திர படமாக உருவாகும் சகுந்தலா படத்தில் இந்த ஜோடி இணைய உள்ளார்களாம். முன்னதாக சகுந்தலா படம் அனுஷ்காவை தேடிச் சென்ற நிலையில் இனிமேல் சரித்திர கதைகளில் நடிக்க மாட்டேன் என அவர் கூறியதை தொடர்ந்து சமந்தாவிடம் வந்து சேர்ந்துள்ளதாம் அந்த கதை.

சமந்தாவும் இதுவரை சரித்திர கதைகளில் நடித்ததில்லை என தற்போது இந்த படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தன்னைவிட வயது குறைவான ஹீரோவாக இருந்தால் தான் நடிப்பேன் என இயக்குனருக்கு கட்டளை போட்டதன் அடிப்படையில் தற்போது இளம் கன்று ஒன்றை களமிறங்கியுள்ளதாம் படக்குழு.