சமூக வலைதளங்களில் படத்தின் வசூலுக்கு அடித்துக் கொண்ட காலம் போய் தற்போது டிவியில் ஒளிபரப்பாகும் விருப்பமான நடிகர்களின் படங்களில் டிஆர்பி யாருடையது அதிகம் என்ற போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி விட்டது.
அதுவும் குறிப்பாக சன் டிவியில் போடப்படும் புதிய படங்களுக்கு உள்ள மவுசே தனிதான். தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களையும் அதிக விலை கொடுத்து வாங்கி சரியான நேரத்தில் ஒளிபரப்புவார்கள்.
அந்த வகையில் இதுவரை சன் டிவியில் கடந்த சில வருடங்களில் முதலிடத்தில் இருப்பது விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படம் தான். அஜித் சார்பில் விஸ்வாசம் படம் மிகப்பெரிய டிஆர்பி பெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த பொங்கலுக்கு சன் டிவியில் சூர்யாவின் சூரரை போற்று படத்தை ஒளிபரப்பினார்கள். சூர்யா ரசிகர்கள் கண்டிப்பாக டிஆர்பி-யில் அஜித் விஜய் படங்களை ஓரம் கட்டிவிடும் என கனவு கண்டு கொண்டிருந்தார்கள்.
ஆனால் அதை எல்லாம் தவிடுபொடியாக்கி விட்டது விக்ரம் பிரபுவின் புலிகுத்தி பாண்டி திரைப்படம். புலிகுத்தி பாண்டி படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பினார்கள். இந்த படத்திற்கு தாய்மார்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

முத்தையா இயக்கத்தில் உருவாகியிருந்த புலிக்குட்டி பாண்டி படத்தில் கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்நிலையில் புலிகுத்தி பாண்டி திரைப்படம் சூரரைப்போற்று படத்தைவிட அதிக பார்வையாளர்களை ஈர்த்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.