தமிழ் சினிமாவில் காற்று வெளியிடை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அதிதி ராவ் ஹைதாரி. இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாவிட்டாளும் அதிதிராவை ரசிக்கக்கூடிய அளவிற்கு ஓரளவு ரசிகர் பட்டாளம் உருவானது.
அதன் பிறகு செக்கச்சிவந்த வானம் , சைக்கோ போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ஹீரோயினாக நடித்தது விட குணச்சித்திர வேடங்களில் தான் அதிகம் நடித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிதி ராவிடம் உங்களுக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான ஆசையில்லையா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அதிதி ராவ் படங்களில் முழுவதும் நான்தான் நடிக்கவேண்டும் என்ற ஆசை எல்லாம் எனக்கு இல்லை, சிறிய நிமிடங்களில் வந்து நடித்தால் கூட போதும். ஆனால் ரசிகர்கள் வீட்டிற்கு சென்றாலும் அவர்கள் மனதில் இடம் பிடிக்க கூடிய அளவிற்கு என்னுடைய கதாபாத்திரம் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
ஹீரோயினியாக நடிக்க வில்லை என்றால் உங்களுக்கு பட வாய்ப்பு கிடைக்காது என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அதிதி ராவ் எனக்கு ஹாலிவுட் நடிகைகள் தான் முன்னுதாரணம். அவர்கள் எப்போதுமே கதாநாயகியாகவோ அல்லது நல்ல கதையாகவோ இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்க மாட்டார்கள்.
அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துக் கொடுத்து விட்டு சென்றுவிடுவார்கள் தவிர, மற்றவர்களின் விவாதங்களுக்கும், விமர்சனங்களுக்கும் கண்டு அஞ்ச மாட்டார்கள் எனக் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தால் போதும் பல பட வாய்ப்புகள் குவியும் எனவும் கூறியுள்ளார்.
இதனைக்கேட்ட ரசிகர்கள் என்ன செல்லம் இப்படி சொல்லிட்டீங்க என்றுமே எங்கள் மனதில் உங்களுக்கு இடம் உள்ளது என சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஆதிராவின் குணத்தை பற்றியும் பாராட்டி வருகின்றனர்.