விஜய் டிவியின் அஸ்திரமாக கடந்த நான்கு வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். மேலும் இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்களையும் தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி உள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த 2020 அக்டோபர் மாதம் நான்காம் தேதி தொடங்கப்பட்டு, இந்த மாதம் (ஜனவரி) 17ஆம் தேதி முடிவடைந்தது.
மேலும் இந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களின் ஒருவர்தான் பின்னணிப் பாடகி சுசித்ரா. இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், பிக்பாஸ் வீட்டிற்குள் சுசித்ரா செய்த டார்ச்சல்களால் பிக்பாஸ் ஆத்திரமடைந்து அவரை வீட்டிலிருந்து வெளியே அனுப்பிவிட்டார். ஏனென்றால், பிக் பாஸ் எரிச்சல் அடையும் அளவிற்கு சுசித்ரா வீட்டிற்குள் தனியாக பேசுவது, புலம்புவது, அழுவது என பலவற்றை செய்து அனைவரையும் பயமுறுத்தினார்.
இந்த நிலையில் சுசித்ரா தற்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பிக்பாஸ் ஷோவின் தொகுப்பாளரான உலகநாயகன் கமலஹாசன்- ஐயும், இந்த சீசன் வின்னரான ஆரி அர்ஜுனனையும் தகாத வார்த்தைகளில் திட்டி ஒரு போஸ்ட் போட்டுள்ளாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதிலும் குறிப்பாக சுசித்ரா அந்தப் பதிவில் உலக நாயகன் கமலஹாசனை ‘பப்பட் மாஸ்டர்’ என்று குறிப்பிட்டிருப்பது பலரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மேலும் சுசித்ரா, பாலா தான் டைட்டில் வின்னர் ஆகவேண்டும் என்று அதிக எதிர்பார்ப்புடன் இருந்தார் என்றும், அது நடக்காத காரணத்தினால் இவ்வாறு பேசி இருக்கலாம் என்றும் பரவலாக சொல்லப்படுகிறது.