தென்னிந்தியாவிலேயே அதிக ரசிகர்களை வைத்துள்ள நடிகை என்றால் சமந்தா மற்றும் நயன்தாரா என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு இவரது படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பல வருடங்களுக்கு முன்பே நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என பெயர் பெற்றார். ஆனால் நயன்தாராவினால் சமந்தாவின் சாதனையை இத்தனை வருடமாக முறியடிக்கவில்லை என்பது சமந்தா வெளியிட்ட தகவலிலேயே தெரிகிறது.
அதாவது ட்விட்டர் இணையதளம் எப்போதுமே பெரிய பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு மட்டுமே எமோஜி வெளியிட்டு வந்தனர். இதுவரை தென்னிந்தியாவில் விஜய் நடித்த மெர்சல், பிகில், மாஸ்டர், ரஜினிகாந்த் நடிப்பில் காலா, சூர்யா நடிப்பில் என் ஜி கே போன்ற படங்களுக்கு மட்டுமே ட்விட்டரில் எமோஜி வெளியிட்டுள்ளனர்.
ஆனால் இதுவரைக்கும் தென்னிந்தியாவில் எந்த நடிகையின் படங்களுக்கும் ட்விட்டரில் எமோஜி வெளியிடப்படவில்லை. தற்போது சமந்தா நடிப்பில் வெளியாகவுள்ள தே ஃபேமிலி மன் வெப் தொடருக்கான எமோஜி தற்போது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதனை சமந்தா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் இது என்னுடைய முதல் எமோஜி என்றும், நான் மிகவும் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் தென்னிந்தியாவிலேயே முதல் முதலாக ட்விட்டரில் எமோஜி வாங்கிய நடிகை என்ற பெருமையை தற்போது சமந்தாவிற்கு கிடைத்துள்ளது.

இதனை பார்த்த இணையவாசிகள் லேடி சூப்பர் ஸ்டார்ரான நயன்தாரா இத்தனை வருடமாக பல படங்கள் நடித்துள்ளார். ஆனால் குறுகிய காலத்திலேயே நயன்தாராவை ஓரங்கட்டிவிட்டு சமந்தா ட்விட்டரில் ஏமோஜி வாங்கியதன் மூலம் தென்னிந்தியாவில் தற்போது முதல் இடத்தை பிடித்து விட்டார் என சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். மேலும் சமந்தாவிற்கு தற்போது பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.