தளபதி விஜய்க்கு சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பது புரியாத புதிராகத்தான் இருக்கிறது. அந்த வகையில் பிரபல இயக்குனர் ஒருவர் கடந்த 7 வருடமாக அடுத்த பட வாய்ப்பு இல்லாமல் தடுமாறிக் கொண்டே இருக்கிறார்.
தற்போதைக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் மிக மிக முக்கியமானவர் தளபதி விஜய். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் இந்திய சினிமாவுக்கே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. அந்த அளவுக்கு இந்த கொரானா சூழ்நிலையிலும் வசூலை வாரி குவித்து வருகிறது.
கடந்த பத்து வருடத்தில் மட்டும் தளபதி விஜய்யின் வளர்ச்சி அனைவரையும் பிரம்மிக்க வைக்கிறது. வசூலைப் பொறுத்தவரை படத்திற்கு படம் தன்னுடைய படத்தின் சாதனையை தானே முறியடித்து வருகிறார். தற்போதைக்கு போட்டியில்லாத நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஆனால் விஜய்யின் சூப்பர் ஹிட் படமாக சொல்லப்படும் ஜில்லா படத்தை இயக்கிய ஆர்டி நேஷன் என்பவர் கடந்த 7 வருடமாக பட வாய்ப்பு இல்லாமல் தடுமாறி கொண்டிருக்கிறார். ஜில்லா வர்த்தகரீதியாக வெற்றியை பெற்றாலும் ஏன் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே கோலிவுட் வாசிகள் கேள்வியாக உள்ளது.
ஆர்டி நேஷன் முன்னதாக 2007 ஆம் ஆண்டு முருகா என்ற படத்தை கொடுத்தார். அதனைத் தொடர்ந்து விஜய்யின் வேலாயுதம் படத்தில் எழுத்தாளராக பணியாற்றினார். அந்த அறிமுகமே அவருக்கு ஜில்லா பட வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது.
இரண்டாவது படத்திலேயே மலையாள சினிமாவின் டாப் ஸ்டார் மோகன்லால், தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார் விஜய் என அனைவரையும் அலரவிட்டார். படமும் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததாக செய்திகள் வெளியாகியது. ஆனால் அதன்பிறகு அவருக்கு வேறு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.
தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம் பொத்தேனி என்பவரிடம் கதை கூறி வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இடையில் தனக்கு அழகிய தமிழ் மகன் என்ற தோல்விப்படம் கொடுத்த பரதன் என்பவரை அழைத்து பைரவா பட வாய்ப்பை கொடுத்த விஜய், ஏன் நேசனுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கவில்லை? என கேள்விகள் எழுந்துள்ளது.
