கோலிவுட்டின் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா. என்னதான் சூர்யா அந்தக் காலத்து முன்னணி ஹீரோ சிவகுமாரின் மகனாக இருந்தாலும், தன்னுடைய சினிமா வாழ்க்கையை நிலைபடுத்துவதற்கு படாதபாடுபட்டார்.
மேலும் சூர்யாவின் ஆரம்ப சினிமா வாழ்க்கை பல தடுமாற்றங்களை கொண்டதாக இருந்தது. இந்த நிலையில் சூர்யா ஜோதிகா உடன் காதல் கொண்ட பிறகுதான் அபாரமான வளர்ச்சியை பெற்றார் என்று நடிகரும் பத்திரிகையாளருமானபயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
அதாவது சூர்யா கோலிவுட்டின் முன்னணி நடிகரின் மகனாக இருந்தாலும், திறமை குறைவாக இருந்ததால் சூர்யாவின் நடிப்பு எடுபடவில்லையாம்.
அதேபோல், சூர்யாவின் அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணம் ஜோதிகாவின் காதல் தான் என்றும், ஜோதிகா சூர்யாவிற்கு நடிப்பு சொல்லிக் கொடுத்திருக்கலாம் என்றும் பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல், ஜோதிகாவின் காதல் தான் சூர்யாவை ஒரு பெரிய நடிகனாக மாற்றியது என்று அடித்துக் கூறியுள்ளார் ரங்கநாதன். இந்தத் தகவல்கள் தற்போது இணையத்தில் தீ போல் பரவி வருகிறது.