தமிழ் சினிமாவில் சமிபகாலமாக சர்ச்சையில் புகழ் பெற்றவர் வனிதா. இவரது இல்லற வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கைப் பற்றி பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். அதற்கெல்லாம் அசால்டாக எதையும் தாங்கும் இதயம் போல் அனைத்திற்கும் பதிலடி கொடுத்து வருகிறார்.
தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார், அதாவது அறிக்கை ஒன்றை மாலத்தீவு அரசு வெளியிட்டது. அதில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான பாலோ வைத்திருப்பவர்களுக்கு அதிரடியான சலுகைகள் அளிப்பதாக மாலத்தீவு அரசுவெளியிட்டதை அடுத்து தற்போது பல பிரபலங்களும் மாலத்தீவு உள்ளேயே சலுகைகளை பெற்று வாழ்ந்து வருகின்றனர்.
வனிதா அவரது மகளுடன் மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அப்போது வித்தியாசமான முறையில் புகைப்படம் எடுத்து அவரது சமூக வலைதள பக்கத்தில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பதிவிட்டுள்ளார். மேலும் இரவு 8 மணிக்கு லைவ் வருவதாகவும் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

புகைப்படம் மற்றும் இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் என்ன வனிதா இது உனக்கு 5வது ஹனிமூன்னா.? கம்பெனிக்கு நான் வரலாமா மேடம் உங்க கூட சரக்கடிக்க, தனிமையிலே இனிமை காண முடியுமா போன்ற கேவலமான கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

என்னதான் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் அவர்களும் நம்மைப் போல வாழ்க்கையில் சராசரியான மனிதர்கள் தான் என்பதை புரிந்து கொள்ளாமல் சில ரசிகர்கள் இப்படி செய்யும் செயல்களை பார்க்கும்போது மனவருத்தம் வருவதாக சிலர் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.
மேலும் உங்களது வாழ்க்கையில் யாரும் தலையிடாத போல நீங்களும் யாருடைய வாழ்க்கையிலும் தலையிடாதீர்கள் என்றும் நல்ல உள்ளம் கொண்ட ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வனிதாவுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.