தமிழில் சங்கர் எப்படியோ அப்படித்தான் தெலுங்கில் ராஜமௌலி. ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு படமும் பிரமாண்ட பட்ஜெட்டில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடைசியாக பாகுபலி படங்களுக்கு சுமார் 250 கோடி பட்ஜெட் செலவு செய்தார்.
ஆனால் வசூல் 1600 கோடிகளுக்கு மேல் குவிந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் மெகா பவர் ஸ்டார் ராம்சரண் (அல்லூரி சீதா ராம ராஜு) மற்றும் ஜூனியர் என்டிஆர் (கொமாரம் பீம்) ஆகிய கதாபாத்திரத்தில் இருவரையும் வைத்து கிட்டத்தட்ட 350 கோடி பட்ஜெட்டில் RRR என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இவர்களைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள் ஆலியா பட், அஜய் தேவ்கான் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் ஹாலிவுட் நடிகை அலிசா டுடி என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரத்தம் ரணம் ரௌத்திரம் என்ற பெயரில் தமிழில் வெளியாக உள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் RRR படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து கடந்த ஜனவரி 8 வெளியாக வேண்டிய திரைப்படம் எதிர்பாராத சூழ்நிலையில் படப்பிடிப்புகள் தள்ளிச் சென்றுவிட்டது.
இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சமீபத்தில் ராஜமௌலி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்தார். ஆனால் படத்தின் ரிலீஸ் தேதியை குறிப்பிடவில்லை.
இந்நிலையில்தான் ஹாலிவுட் நடிகை அலிசா டுடி என்பவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் RRR திரைப்படம் அக்டோபர் 13ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு வெளியாகப் போவதாக அறிவித்து விட்டார். இதனைப் பார்த்த படக்குழு அதிர்ந்துபோய் உடனடியாக அந்த பதிவை நீக்குமாறு கேட்டுக் கொண்டார்களாம்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்தின் ரிலீஸ் தேதியை இப்படி சாதாரணமாக சொன்னால் படத்தின் மீது எதிர்பார்ப்பு இருக்காது என்பது படக்குழுவினரின் என்னமாம். ஆனால் ராஜமவுலி இயக்கும் படங்களுக்கு ஐந்து மொழிகளிலும் பிரம்மாண்ட வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.