ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம் நடிகை ஒருவர் தன்னுடைய மன அழுத்தம் காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு இறந்த செய்தி சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழைப் போலவே மற்ற மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னடத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் ஜெயஸ்ரீ. அது மட்டுமில்லாமல் பல படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் சமீபகாலமாக இவருக்கு பெரிய அளவில் படவாய்ப்புகள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் சின்ன சின்ன நிகழ்ச்சிகளில் கூட வாய்ப்பு இல்லாமல் தடுமாறி வந்தாராம். இதனால் சம்பாதிக்க முடியாமல் மிகவும் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது.

சமீபத்தில் தன்னுடைய பேஸ்புக் வலைதள பக்கத்தில் கூட நான் இந்த உலகை விட்டு விலக போகிறேன் என சூசகமாக தன்னுடைய தற்கொலை பற்றி முன்னரே அறிவித்தாராம். ஆனால் யாரும் பெரிதாக அதை எடுத்துக் கொள்ளவில்லையாம்.

jayashree-actress
jayashree-actress

இந்நிலையில் திடீரென தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு அவரது மன அழுத்தம்தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பப்ளிசிட்டிக்காக இதை சொல்ல வில்லை எனவும், உண்மையாகவே மிகவும் மன கஷ்டத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கன்னட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஜெயஸ்ரீயின் சொந்த முடிவு என்பதால் தற்கொலை என கேஸ் முடிய அதிக வாய்ப்பு இருக்கிறதாம். இருந்தாலும் சம்பிரதாயத்திற்கு ஜெயஸ்ரீ குடும்பத்தினரை விசாரணை செய்து வருகிறார்களாம்.

Trending News