ராஜமௌலி இயக்கத்தில் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் ரணம் ரத்தம் ரௌத்திரம்(RRR) படத்தின் வெளியீட்டு தேதி அக்டோபர் 13 என படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால் நீங்க எப்படி அந்த தேதியில் ரிலீஸ் செய்யலாம்? என ராஜமௌலியிடம் சண்டைக்குப் போயுள்ளார் போனி கபூர்.
பிரம்மாண்ட இயக்குனராக சமீபகாலமாக சங்கரை மிஞ்சி மாஸ் காட்டி வருகிறார் ராஜமௌலி. பாகுபலி படங்களின் வெற்றி அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ராஜமௌலியை நம்பி ஆயிரம் கோடி கூட கொட்டத் தயாராக இருக்கிறார்கள் பலர்.
அந்த வகையில் 400 கோடி பட்ஜெட்டில் சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் தான் ரணம் ரத்தம் ரௌத்திரம்(RRR). தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிக்கின்றனர்.
மேலும் பாலிவுட் பிரபலங்களான அஜய் தேவ்கான், ஆலியா பட் போன்றோரும் நடிக்கின்றனர். இந்நிலையில் RRR படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 18-ம் தேதி என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஆனால் அக்டோபர் 15-ஆம் தேதி அஜய் தேவ்கன் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் மைதான் என்ற படம் வெளியாக உள்ளதாக கடந்த வருடமே அறிவித்துவிட்டனர். சில தின இடைவெளியில் அஜய்தேவ் கான் நடித்த இரண்டு பிரம்மாண்ட பட்ஜெட் படங்களும் வெளிவருவது சரியில்லை என RRR படக்குழுவினரிடம் சண்டைக்கு சென்றுள்ளார் போனி கபூர்.

மேலும் RRR படக்குழுவினர் இப்படி செய்வார்கள் என கனவிலும் நினைத்து பார்க்கவில்லை எனவும், இது தனக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்து விட்டதாகவும் புலம்பியுள்ளார். ஆனால் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக உருவாகிவரும் வலிமை படத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசாதது அஜித் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.