தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வரும் நடிகர் விவேக் சமீபத்தில் ஒரு ரசிகர் கிண்டல் செய்ததற்கு செருப்படி பதிலடி கொடுத்துள்ள பதிவு தற்போது இணையதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.
மேடை நாடகங்களில் நடித்து பின்னர் சினிமாவில் நுழைந்து தன்னை தானே மெருகேற்றி காமெடியில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் விவேக். மற்ற காமெடி நடிகர்களைப் போல் இல்லாமல் சமூக கருத்துக்களை தன்னுடைய காமெடி வாயிலாகவே அனைவரையும் யோசிக்க வைத்தவர்.
மேலும் மற்ற காமெடி நடிகர்களை காட்டிலும் நடிகர் விவேக் மீது பலருக்கும் ஒரு அபரிதமான மரியாதை உண்டு. அதற்கு காரணம் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் தீவிர ரசிகர் விவேக். அது மட்டுமல்லாமல் அவரது கொள்கைகளை அப்படியே கடைபிடித்து வாழ்பவர். சுவாமி விவேகானந்தரின் தீவிர ரசிகரும் தான்.
பெரும்பாலும் யார் மனதையும் புண்படுத்தாதபடி தன்னுடைய பதிவுகளை சமூக வலைதளங்களில் கவனமாக பதிவிடுவார் விவேக். இருந்தாலும் ஒரு சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அத்துமீறி தரக்குறைவான பதிவுகளை பதிவிடுவதற்கு விவேக் இப்படி ஒரு செம பதிலடி கொடுப்பார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
கூத்தாடி என கிண்டலடித்த ரசிகரை, கூத்தாடி என்று சொல்லிவிட்டு எங்கள் குடும்பத்தில் ஒருவரின் புகைப்படத்தை ஏன் டிபியாக வைத்துள்ளீர்கள்? என கேள்வி கேட்டுள்ளார். மேலும் கூத்தாடி என்று சொல்வதால் நாங்கள் தாழ்ந்து விடுவதில்லை எனவும், அதுவும் எங்களுக்கு பெருமை தான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி ஒரு பதிலடியை விவேக் கொடுப்பார் என கண்டிப்பாக அந்த ரசிகர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் இதுபோன்ற அத்துமீறல்கள் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒருவரை தரைகுறைவாக விமர்சிப்பதில் அவர்களுக்கு அப்படி என்ன ஆனந்தமோ தெரியவில்லை!