தமிழ் சினிமாவுக்கே மறுவாழ்வு கொடுத்தது போல மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அமேசான் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 15 நாட்களே ஆன நிலையில் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் மாஸ்டர் படத்தை தூக்கி அமேசான் தளத்தில் கொடுத்து விட்டனர். அவர்களும் நேற்று அதிகாரப்பூர்வமாக படத்தை வெளியிட்டனர்.
இதனால் தியேட்டர்காரர்கள் விஜய் மற்றும் மாஸ்டர் படக்குழுவின் மீது செம கடுப்பில் இருக்கிறார்களாம். மேலும் மாஸ்டர் படத்தை அமேசான் தளத்தில் வெளியிடக்கூடாது என இரண்டு நாட்களாக தொடர்ந்து மீட்டிங் போட்டு பேசி வருகின்றனர்.
இருந்தாலும் அதில் சிலர், விஜய் இந்த சூழ்நிலையில் நமக்கு படம் கொடுத்ததே பெரிய விஷயம் எனவும், இந்த விஷயத்தை பெரிது செய்ய வேண்டாம் எனவும் அரைமனதாக முடிவுக்கு வந்துள்ளார்களாம். மேலும் அமேசான் தளத்தில் படம் வெளியானாலும் தியேட்டரில் தொடர்ந்து படத்தை போடவும் முடிவு செய்துள்ளார்களாம்.
இவ்வளவு சர்ச்சைகளுக்கும் காரணம் வெறும் 15 கோடி தானா என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள். முன்னதாக தியேட்டர்காரர்கள் நல்ல வசூல் பார்த்துவிட்டு அதில் தயாரிப்பாளருக்கு சரியான முறையில் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர். மேலும் நஷ்ட கணக்கு காட்டியதாகவும் சங்கடபட்டுள்ளார் தயாரிப்பாளர்.
இந்நிலையில்தான் வெளிநாட்டு ரசிகர்களை காரணம் காட்டி மாஸ்டர் படத்தை அமேசான் எக்ஸ்ட்ரா 15 கோடி கொடுத்து வாங்கிக் கொண்டதாம். அரசனை நம்பி புருஷனைக் கைவிட வேண்டாம் என அமேசான் நம்பி மாஸ்டர் படத்தை ஒப்படைத்து விட்டாராம் தயாரிப்பாளர்.
அதன் பிறகு தான் இவ்வளவு பெரிய தியேட்டர் முதலாளிகள் சர்ச்சை எழுந்தது. இருந்தாலும் இந்த பகையை மனதில் வைத்துக்கொண்டு விஜய்யின் அடுத்தடுத்த பட வெளியீடுகளில் தியேட்டர்காரர்கள் கண்டிப்பாக வேலையை காட்டுவார்கள் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.