வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

கே ஜி எஃப் 2 படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. உலக அளவில் மிரட்ட போகும் யாஷ்!

கன்னட சினிமாவை தாண்டி இந்திய அளவில் வெற்றி அடைந்த திரைப்படம் தான் கேஜிஎஃப். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த யாஷ் மாபெரும் புகழின் உச்சத்துக்கு சென்றார்.

கே ஜி எஃப் முதல் பாகம் வெற்றியடைந்ததை அடுத்து ரசிகர்கள் அனைவரும் கே ஜி எஃப் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பில் இருந்தனர். மேலும் சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனால் படக்குழுவினர் மற்றும் யாஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். தற்போது அவர்களுக்கு மீண்டும் இரட்டிப்பு மகிழ்ச்சியாக கே ஜி எஃப் இரண்டாம் பாகம் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

kgf 2
kgf 2

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படம் எத்தனை திரையரங்கில் வெளியாகும் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என கூறி வருகின்றனர்.

பல நாட்களாக படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்த படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் படத்தை புரமோஷன் செய்யும் வேலையிலும் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News