வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஹரி- அருண் விஜய் படத்தில் இணைந்த கேஜிஎஃப் பிரபலம்! தெறிக்க விடப்போகும் முரட்டு வில்லன் ரெடி

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக கால்பதித்து இருந்தாலும் தனது கடின உழைப்பால் தற்போது முன்னணி நடிகர்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் வளர்ந்து நிற்பவர் தான் நடிகர் அருண்விஜய்.

என்னதான் அருண் விஜய் சினிமா துறையில் ஏற்கனவே கால்பதித்து இருந்தாலும், ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு தான் இவரது மவுசு கோலிவுட்டில் அதிகமானது. இந்த படத்திற்கு பிறகு வரிசையாக படவாய்ப்புகள் அருண் விஜய்க்கு குவிந்த வண்ணம் இருக்கின்றன. அதேபோல் அருண் விஜய்க்கு என தனி ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது.

தற்போது அருண் விஜய் இயக்குனர் ஹரி இயக்கத்தில் புதியதாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்தப்படத்தில் யோகிபாபு, பிரகாஷ்ராஜ் போன்றோரும் இணைந்து உள்ளனர் என்பது நாம் முன்பே அறிந்த விஷயம். இந்நிலையில் கேஜிஎஃப் படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் ஒருவர் அருண் விஜயின் படத்தில் இணைய உள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.

kgf-hero-cinemapettai

அதாவது கேஜிஎஃப் படத்தில் கருடா   என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் ராமச்சந்திர ராஜு, அனைத்து தரப்பிலும் இருந்து பாராட்டு பெற்றார்.

மேலும் தற்போது இவர் மோகன்லால் நடித்து வரும் ஆராட்டு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறாராம். இவ்வாறிருக்க தற்போது கேஜிஎஃப் புகழ் ராமச்சந்திர ராஜு, அருண் விஜயின் படத்தில் இணைந்திருப்பதாக அந்தப் படத்தைத் தயாரிக்கும் டிரம்ஸ்டிக் ப்ரொடக்ஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எனவே கேஜிஎஃப் புகழ் நடிகர் அருண் விஜய்யுடன் நடிக்க உள்ள இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக ஏறியுள்ளது.

Trending News