வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அருந்ததி படத்தில் நடித்த குட்டி அனுஷ்காவா இது? 33 வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க!

தெலுங்கு சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய திரைப்படம் தான் அருந்ததி. அதுவரை கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்த அனுஷ்கா முதல்முறையாக சோலோ ஹீரோயினாக நடித்த திரைப்படம்.

இன்றும் அருந்ததி படத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த அளவுக்கு அருந்ததி படம் அனைவரது மத்தியிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழிலும் அருந்ததி படம் டப் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு பிறகு தான் தைரியமாக சோலோ ஹீரோயின் படம் எடுக்கலாம் என பலருக்கும் தோன்றியது. அதனைத் தொடர்ந்து தற்போது வரை அனுஷ்கா சோலோ ஹீரோயினாக பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

அனுஷ்காவுக்கு பிறகுதான் அனைத்து நடிகைகளுக்கும் சோலோ ஹீரோவின் படங்கள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வர ஆரம்பித்தது. மேலும் அருந்ததி படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் இன்றும் ஆழமாய் பதிந்துள்ளது.

வில்லனாக நடித்த சோனு சூட், மனோரமா கதாபாத்திரம், சாயாஜி ஷிண்டே முஸ்லிம் கதாபாத்திரம் என அனைத்தும் ரசிகர்களுக்கு அடுத்த படி. அதேபோல் சிறுவயது அனுஷ்காவாக அருந்ததி படத்தில் நடித்தவர் தான் திவ்யா நாகேஷ்.

divya-nages-arundathi-fame
divya-nages-arundathi-fame

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தெலுங்கு சினிமாவின் கதாநாயகியாக வலம் வந்தார். தற்போது திவ்யா நாகேஷுக்கு 33 வயதாகிறது. ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்தாலும் அனைத்தும் தோல்வியை சந்தித்ததால் தற்போது சினிமாவை விட்டு விலகி உள்ளாராம்.

divya-nagesh-cinemapettai
divya-nagesh-cinemapettai

Trending News