தமிழ் சினிமாவை பொறுத்தவரை வாழ்ந்து கெட்ட தயாரிப்பாளர்கள் பலர் உண்டு. அந்த வகையில் வடிவேலுவை ஹீரோவாக வைத்து ஒரு படம் தயாரித்த தயாரிப்பாளர் அதன்பிறகு நடுத்தெருவுக்கே வந்து விட்டாராம்.
வடிவேலு மூன்று கெட்டப்புகளில் நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் தான் இந்திரலோகத்தில் நா அழகப்பன். இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு வடிவேலு ஹீரோவாக நடிப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
நாடக கலைஞராக வடிவேலு இந்த படத்தில் நடித்திருப்பார். மேலும் இந்த படத்தை எழுதி இயக்கியவர் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்கராகவும் குணச்சித்திர நடிகராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் தம்பி ராமையா தான்.
2008 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. மேலும் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய பிறகு ஸ்ரேயாவுக்கு வாய்ப்புகளே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்திரலோகத்தில் நா அழகப்பன் திரைப்படத்தில் எதிர்பார்த்த அளவு காமெடி இல்லை என்பதே குறையாக சொல்லப்பட்டது. மேலும் இந்த படத்தை 23ஆம் புலிகேசி படத்துடன் ஒப்பிட்டு பல பத்திரிகைகளில் குறைகளை அதிகமாக எழுதி விட்டார்களாம்.
இதனாலேயே படம் படு தோல்வியை சந்தித்ததாக செவன்த் சேனல் புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓப்பனாக தெரிவித்துள்ளார். இந்த படத்தால் பல கோடி நஷ்டத்தை சந்தித்தாராம் நாராயணன்.