ஈரோட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மலையாள பைங்கிளி ஐஸ்வர்யா மேனன், கோலிவுட்டிலும் சில டோலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா தமிழில் ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு வெளியான ‘நான் சிரித்தாள்’ திரைப்படம் தான் இவரது நடிப்பில் வெளியான கடைசி படம். இதனைத்தொடர்ந்து எந்த படத்திலும் ஐஸ்வர்யா நடிக்கவில்லை.
அதேபோல் பெரிய ஹீரோக்களுடன் இணைய வேண்டும் என்ற எண்ணத்தில் வழக்கம்போல் எல்லா ஹீரோயினும் செய்யும் சேட்டையைதான் ஐஸ்வர்யாவும் செய்து வருகிறார். அதாவது தன்னுடைய சமூக வலைதள பக்கம் முழுவதும் கவர்ச்சி புகைப்படங்களை நிறைத்து, தான் ஒரு பக்காவான நடிகை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா.
மேலும் இவருடைய புகைப்படங்களை பார்ப்பதற்கு என்று 2 மில்லயன் போலவர்ஸ் இருக்கின்றனராம். இதனால் அம்மணி சலிக்காமல் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு கொண்டே இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம், ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.
ஏனென்றால், இந்த புகைப்படத்தில் கவர்ச்சி அவ்வளவாக இல்லாவிட்டாலும், லுக்காலே ரசிகர்களை கிறுகிறுக்க வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.