சித்து பிளஸ் 2 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி. இப்படத்தில் சாந்தனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.
அதன் பிறகு பில்லா பாண்டி, கட்டப்பாவ காணோம், வில்லம்பு மற்றும் மன்னர் வகையறா போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால் எந்த படமும் இவருக்கு பெரிய அளவுக்கு வெற்றி பெறவில்லை இதனால் படவாய்ப்புகள் குறைய சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.
இவர் இரட்டை ரோஜா மற்றும் தாழம்பூ ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். இவர் டிக் டாக் வீடியோ போடுவது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிடுவது என சமூக வலைதளப் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.
அப்போது ஒரு ரசிகர்கள் உங்கள் கணவர் யார் என தொடர்ந்து கேட்டுக் வந்ததாகவும். உங்களின் விருப்பத்திற்காக என்னுடைய கணவரை முதல்முறையாக உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என்று தன் கணவருக்கு நச்சுன்னு கிஸ் அடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ பார்த்த ஒரு சில ரசிகர்கள் அற்புதமான ஜோடி தான், அது மட்டுமில்லாமல் சாந்தினிக்கு சிங்கிள்ஸ் சாபமிட்டு சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.