டிக் டாக் காலத்தில் ரொமான்ஸ் பாடல்களுக்கு வீடியோ வெளியிட்டு ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் சன் டிவி சீரியல் நடிகை வெண்பா. இவருக்கு டிக்டாக்கில் அதிகமானோர் பின்பற்றினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ராதிகா நடிக்கும் சித்தி 2 சீரியல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இவர் பிரபலமடைந்தது விட வெண்பா டிக்டாக்கில் செய்த வீடியோ மூலம் தான் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.
தெய்வமகள் சீரியல் வெற்றி பெற்றதற்கு வாணிபோஜன் காரணமோ அதே போல தான் சித்தி 2 சீரியல் வெற்றி பெறுவதற்கும் ப்ரீத்தி ஷர்மா ஒரு காரணம் என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் தாவணியுடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அட நம்ம பிரீத்தி சர்மாவா இப்படி அழகாக உள்ளார் எனவும், மேலும் இவர் முதுகில் குத்திய டாட்டூ பார்த்து நாங்களும் டாட்டூ குத்த ஆசைப்படுவதாகவும் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர்.
பெரிய நடிகைகளுக்கு கிடைக்கும் வரவேற்பு போல ப்ரீத்தி சர்மாவிற்கு சமூக வலைதள பக்கத்தில் அதிகமான வரவேற்பு உருவாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் பெரிய நடிகைகளுக்கு ரசிகர்கள் உள்ளது போல் ப்ரீத்தி சர்மாவிற்கு இணையத்தில் அதிகமான ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். இந்தபுகைப்படத்தை பார்த்து அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.