தமிழ் சினிமாவில் சமீப காலமாக ஒருவரின் கதையை திருடி படமாக எடுக்கப்படும் சம்பவம் நடைபெற்று வருகிறது. கதை திருட்டு சம்பவத்தில் அட்லி மற்றும் ஏ ஆர் முருகதாஸ் வரிசையில் தற்போது வெங்கட்பிரபு இடம் பிடித்துள்ளார் என நெட்டிசன்கள் கிழித்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட ஷங்கர் ஒருவரின் கதையை திருடி எந்திரன் படத்தை எடுத்ததாக புகார் ஒன்றை தெரிவித்திருந்தனர். தற்போது அதே மாதிரி சசிதரன் என்பவர் தான் எழுதி வைத்திருந்த நேரடி ஒளிபரப்பு கதையை வெங்கட்பிரபு திருடி லைவ் டெலிகாஸ்ட் எனும் வெப்சீரிஸ் எடுத்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் சசிதரன் வெங்கட்பிரபுவின் முகத்திரையை ஒவ்வொன்றாக கிழித்தெறிந்தார். அந்தப் பேட்டியில் சசிதரன் 2006 ஆம் ஆண்டு நேரடி ஒளிபரப்பு என்னும் பெயரில் கதையை எழுதியதாகவும் அந்த கதையைத்தான் வெங்கட்பிரபு டெலிகாஸ்ட் என வெப்சீரிஸ் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் வெங்கட்பிரபுவின் உறவினர் தனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்பதால் வெங்கட்பிரபு உடன் பழக வாய்ப்பு கிடைத்ததாகவும் அதன் பிறகு வெங்கட்பிரபு நெருங்கிய நண்பன் என்பதால் எழுதும் கதைகள் அனைத்தையும் வெளிப்படையாக பேசிக் கொள்வோம் எனக் கூறியுள்ளார்.
அப்படி பேசப்பட்ட கதைதான் சென்னை 600028 படத்தின் கதை என கூறியுள்ளார். நேரடி ஒளிபரப்பு கதையை முதலில் வெங்கட்பிரபு வைத்து இயக்குவதாக முடிவு செய்ததாகவும் அதற்கான முயற்சிகளில் வெங்கட் பிரபுவும் நானும் பல தயாரிப்பாளர்களை போய் நேரில் சந்தித்ததாக கூறியுள்ளார்.
நேரடி ஒளிபரப்பு படத்தின் கதை அனைத்து தயாரிப்பாளர்களும் பிடித்ததாக கூறியதை கேட்ட வெங்கட் பிரபு இக்கதையின் மீதான ஆர்வம் அவருக்கு தோன்றியதாக சசிதரன் கூறினார்.
மேலும் சசிதரன் 80க்கும் மேற்பட்ட கதைகளை எழுதி வைத்துள்ளதாகவும் அதில் ஒரு கதைதான் நேரடி ஒளிபரப்பு என கூறியுள்ளார். தற்போது வெங்கட் பிரபு மீது கதைத்திருட்டு வழக்கு போட்டு உள்ளதாகவும் விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் சமூக வலைதளத்தில் வெங்கட்பிரபுவின் மாநாடு படத்தின் கதையும் திருட்டு கதையாக இருக்குமோ. ஏதாவது ஒரு இயக்குனர் கேஸ் போட்டா தான் தெரியும் என கிண்டலாக பதிவு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.