பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தவர் சுஜா. படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான விட விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமானார்.
ரசிகர்களின் ஆதரவால் பிக்பாஸ் வீட்டில் 91 நாட்கள் வெற்றிகரமாக இருந்து பின்பு பிக் பாஸ் வீட்டில்லிருந்து வெளியேறினார். அதன் பிறகு சத்ரு எனும் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றார்.
தற்போது சித்தி 2 சீரியலில் ஒரு சில காட்சிகளில் நடித்து வருகிறார். சுஜாதா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளிவந்த பிறகு அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்புகளும் வரவில்லை.
அதனால் தொடர்ந்து தனது புதிய புதிய தோற்றத்தில் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது யோகி பாபு மற்றும் குக் வித் கோமாளி புகழ் கெட்டப்பில் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் எங்களுக்கெல்லாம் முடி கொட்டுகிறது. யோகி பாபு மற்றும் புகழ், சுஜாதாவிற்கு மட்டும் எப்படி முடி கொட்டாமல் உள்ளது என யோகி பாபு உடன் சுஜாதா ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.