தமிழ் சினிமாவில் தன் அழகால் ஒரு காலத்தில் அனைத்து ரசிகர்களையும் கட்டிப் போட்டவர் ரீமா சென். இவர் மின்னலே என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி படம் மாபெரும் வெற்றி பெற்றதால் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.
அதன் பிறகு விஜய், விக்ரம் போன்ற உச்ச நட்சத்திர நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்தார். அதன்பிறகு ஒரு சில காலங்கள் அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் வராமல் இருந்தது.
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் சினிமாவில் ரி என்றி கொடுத்தார்.
இவரது நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான திரைப்படம் சட்டம் ஒரு இருட்டறை. இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் அடுத்தடுத்து ரீமாசென் பட வாய்ப்புகள் வராமல் தமிழ் சினிமாவை விட்டு விலகினார்.
![reema sen](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/02/reema-sen.jpg)
சினிமா விட்டு விலகிய ரீமாசென் தற்போது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். தன் கணவர் மகனுடன் சுற்றுலா சென்ற ரீமாசென் ஒரு புகைப்படம் எடுத்து அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
![reema sen](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/02/reema-senn.jpg)
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வயசானாலும் அழகும் ஸ்டைலும் குறையாமல் உள்ளாரே ரீமா சென் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.