தமிழ் சினிமாவின் முன்னாள் தயாரிப்பாளர்கள் பலரும் தற்போது படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் நிலையை கண்டு பரிதாபமாக பார்க்கிறார்களாம். அந்த அளவுக்கு முறையாக பிளான் பண்ணாமல் பலரும் சிக்கி தவிக்கின்றனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் விஜய் படத்தால் வாழ்க்கையை இழந்த பிரபல தயாரிப்பு நிறுவனம் பற்றி கவலையுடன் பேசியுள்ளார். மேலும் அதற்கு முழுக்க முழுக்க காரணம் இயக்குனர் தான் எனவும் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் மெர்சல். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்தது. ஆனால் குறித்த பட்ஜெட்டைவிட பலகோடி அதிகமாக செலவு செய்துவிட்டாராம் அட்லீ.
அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மனைவியை கூட்டிக்கொண்டு ஊர் சுற்றுவதற்கு தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் பணத்தைத்தான் செலவு செய்தார் என அப்போதே பலமாக எதிர்ப்புகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தயாரிப்பாளர் கே ராஜன் தளபதி விஜய்யை வைத்து படம் தயாரித்தால் குறைந்தபட்சம் 15 கோடி லாபம் கிடைக்கும் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆனால் தயாரிப்பாளரின் கஷ்டத்தை புரிந்து இயக்குனர் சரியாக திட்டமிடல் அவசியம்.
ஆனால் அட்லீ தேவையில்லாத செலவுகளை இழுத்து தற்போது தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தையே இழுத்து மூடும் அளவுக்கு பயங்கர வேலை செய்து விட்டதாக தயாரிப்பாளர் கே ராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் விரைவில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மீண்டும் விஜய்யை வைத்து படம் தயாரிக்க இருக்கும் தகவலையும் குறிப்பிட்டுள்ளார்.