சமீபத்தில் வெளியாகி இந்திய சினிமாவுக்கே வெளிச்சம் கொடுத்த திரைப்படமாக அமைந்தது மாஸ்டர். இந்த மாதிரி கஷ்டமான காலகட்டங்களில் கூட பெரியளவில் வசூல் செய்யும் என நிரூபித்துக் காட்டினார் விஜய். லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்கள் போல் பெரிய அளவு கதையில் வித்தியாசமில்லாததால் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படத்தின் வசூலுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.
எதிர்பார்த்ததைவிட அதிகமாக வசூல் செய்தது. உலகம் முழுவதும் மாஸ்டர் படம் 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து விட்டதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் 140 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாகவும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.
மேலும் பாகுபலி 2 படத்தின் ஷேர் ரெக்கார்டை மாஸ்டர் படம் வீழ்த்தி விட்டதாக சமீபத்தில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் திடீரென ரசிகர்களின் விருப்பமான திரையரங்கம் ஒன்று மாஸ்டர் படத்தின் டிக்கெட் விலை வெறும் 50 ரூபாய் என அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாஸ்டர் படம் வெளியாகி இருபத்தைந்து நாட்கள் ஆன நிலையில் தற்போது 25வது தினத்தை பல திரையரங்குகள் பல்வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர். முந்தைய காலகட்டங்களில் 300 நாட்கள் கூட ஒரு படம் திரையரங்குகளில் ஓட்டம் பெறும். ஆனால் கடந்த சில வருடங்களாக இரண்டு வாரங்கள் ஓடினாலே பெரிது என்பது போலாகிவிட்டது.
இதனால் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு வேண்டுமென்றே தியேட்டர்காரர்கள் 25வது நாள், 50வது நாள், நூறாவது நாள் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை பயன்படுத்தி சம்பாதித்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் ரசிகர்களின் கோட்டையாக கருதப்படும் திருநெல்வேலி ராம் முத்துராம் சினிமாஸ் நிறுவனம் மாஸ்டர் படம் குறிப்பிட்ட காட்சிகளை 50 ரூபாய் மட்டும்தான் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் மாஸ்டர் தங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததாகவும், இதனால்தான் ரசிகர்களின் மகிழ்ச்சிக்காக விலையை குறைத்து கொடுப்பது போலவும் தெரிவித்துள்ளனர். ஆனால் சும்மா விடுவார்களா விஜய்யின் ஹேட்டர்ஸ். படம் சரியாக ஓடவில்லை என்றும், ஒரு ரூபாய்க்கு படம் ஓடினாலும் மொக்க படத்தை பார்க்க யாரும் வரமாட்டார்கள் என கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை அள்ளித் தெளித்து வருகின்றனர்.