ராம் கோபால் வர்மா என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பல உருவங்கள் உண்டு. இவரின் பணிகள் இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெரும்பான்மையாக பங்களித்துள்ளார்.
ஆனால் ராம் கோபால் வர்மா எப்பொழுதும் சர்ச்சையை ஏற்படுத்துபவர். இவர் ட்விட் போட்டால் போதும் அனைத்தும் சர்ச்சைக்குரியதாகத்தான் இருக்கும். அதேபோல் இவர் எடுக்கும் படங்களிலும் சர்ச்சைக்குப் பஞ்சமிருக்காது.
அந்தவகையில் தெலுங்கானாவில் 2019ஆம் ஆண்டு இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி எரித்துக் கொல்லப்பட்டார். அதன்பின் குற்றவாளிகள் போலீஸாரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்குனர் ராம் கோபால் வர்மா ‘திஷா என்கவுண்டர்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் திஷாவாக சோனியா இலகுவார் நடித்துள்ளார்.
எனவே இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று திஷாவின் தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது மட்டுமல்லாமல் பெண்கள் சங்கமும் இந்தப் படத்திற்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வருகிறது.
இருப்பினும் ராம் கோபால் வர்மா படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தபோது படத்தில் பாலியல் பலாத்கார காட்சிகளை அப்படியே படமாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனவே இந்தப்படம் ரிலீஸ் செய்ய அனுமதி வழங்கப்படாமல், மேல் முறையீட்டுக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று தணிக்கை குழு வலியுறுத்தி உள்ளதாம்.
மேலும் படத்தின் பதைபதைக்கும் ட்ரைலர் வீடியோ இதோ!