தமிழ் சினிமாவில் ‘பலே வெள்ளையத் தேவா’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை லிசா எக்லேர்ஸ். இதனைத்தொடர்ந்து லிசா, ‘என் அன்பே லிசா’ என்ற படத்தில் பேயாக நடித்துள்ளாராம். ஆனாலும் இவரால் தமிழ் மக்களிடையே பிரபலமாக முடியவில்லை.
தற்போது தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கண்மணி சீரியல் சௌந்தர்யா எனும் கேரக்டரில் நடித்து வருகிறார். இவரது ரோல் தமிழ் மக்களின் மத்தியில் தற்போது நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
ஏனென்றால் என்னதான் மற்ற சேனல்களில் புதுபுது நாடகங்கள் வெளிவந்தாலும் சன் டிவியில் இரவு நேரங்களில் வரும் சீரியல்களுக்கு தான் பெரிய மவுசு இருக்கிறது. இதனால் லிசாவுக்கு கிடைத்த வாய்ப்பை அவர் நழுவ விடாமல் சன்டிவி நாடகங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் லிசா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது தற்போது உள்ள நடிகைகள், நடிகர்கள் என அனைவரும் செய்யும் ஒரே காரியம் சோசியல் மீடியாக்களின் மூலம் ரசிகர்களுடன் இணைந்து இருப்பதுதான்.
அந்த வகையில் லிசா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் அவ்வப்போது ரசிகர்களின் கண்ணுக்கு குளுமையான புகைப்படங்கள் பலவற்றை பதிவிட்டு அவர்களை கிறங்க விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தான் செல்லும் இடமெல்லாம் புகைப்படங்களை எடுத்து அந்த புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார் லிசா.
தற்போது சிகப்பு நிற சேலையில் வசீகரிக்கும் பார்வையில் படுகவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். இந்தப் படம் சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டாகி இணையத்தை உலுக்கி கொண்டிருக்கிறதாம்.