மலையாள திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை அனு இமானுவேல். இவர் தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அதேபோல் அனு இமானுவேல் தமிழில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த ‘நம்ம வீட்டு பிள்ளை’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து பல தமிழ் ரசிகர்களின் மனதில் கால்பதித்தார்.
மேலும் தமிழில் நடித்துள்ள அனைத்து படங்களிலும் குடும்ப குத்து விளக்காக தோன்றியிருக்கும் அனு, தெலுங்கில் அப்படி இல்லையாம். தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் கவர்ச்சி தூக்கலாக காட்டி, பல ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கிறார் அனு இமானுவேல்.
இந்த நிலையில் தற்போது அனு தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.
தற்போதுள்ள நடிகைகளுக்கு சோஷியல் மீடியாக்கள் மிக முக்கிய பொழுதுபோக்காக மாறியதோடு, ரசிகர்களுடன் இணைந்திருக்கும் புது யுக்தி ஆகவும் மாறி இருக்கிறது. அந்த வகையில் அனு இமானுவேல் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
தற்போது அனு இமானுவேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. ஏனென்றால் இந்த புகைப்படத்தில் அனு சேலை கட்டி இருந்தாலும், கிளாமரை தெளித்துவிட்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, ‘தமிழ்ல கொஞ்சம் கவர்ச்சியா காட்டுமா’ என்று கூறிய ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.