சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தளபதியை திக்குமுக்காடச் செய்த ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் தற்போது கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் நடிகர் தான் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகும் ஒவ்வொரு திரைப்படமும் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவதோடு, பாக்ஸ் ஆபீஸில் சாதனை புரிகிறது.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளுக்கு புத்துயிர் அளித்த படமாகக் கருதப்படுகிறது. இதனால் தியேட்டர் ஓனர்கள் தளபதி விஜய்யை ‘பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி’ என்றே கூப்பிட ஆரம்பித்துவிட்டனர். அந்தளவிற்கு வசூலில் சாதனை புரிந்துள்ளது மாஸ்டர்.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் கார் முன்பு ரசிகர்கள் ஆரவாரத்துடன் கத்தி, தளபதியை அன்பால் திக்குமுக்காட வைத்த வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது தீ போல் பரவி வருகிறது.

அதாவது தளபதி விஜய் ஒவ்வொரு புத்தாண்டிற்கு செய்தியாளர்களையும், அவருடைய ரசிகர்களையும் சந்திப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக இந்த சந்திப்பு நடைபெறவில்லை என்று சொல்லப்படுகிறது.

ஆகையால் இந்த வருட சந்திப்பை தன்னுடைய பண்ணையூர் வீட்டில் வைத்திருக்கிறார் தளபதி. அதற்கு காரில் சென்ற போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் அனைவரும் தளபதி காரை பார்த்தவுடன் ‘தளபதி தளபதி’ என்று கோஷம் போட ஆரம்பித்துவிட்டனராம்.

vijay-65
vijay-65

தளபதி மாஸ்டர் படத்தில் இருந்த கெட்டப்பில் தான் தற்போது வரை இருக்கிறாராம். அதேபோன்று தளபதி கார் உள்ளே சென்றவுடன், ரசிகர்கள் அனைவரும் தளபதி தளபதி என்று கோஷமிட்டுக்கொண்டு காரின் பின்னாலேயே சென்றிருக்கிறார்கள்.

இது பற்றிய வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

Trending News