வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பிரபாஸ் கேஜிஎப் இயக்குனர் கூட்டணியில் இணைந்த கொடூர வில்லன்.. எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கிய சலார்

இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நடிகர்களின் படங்களில் பிரபாஸ் படங்கள் முக்கிய இடத்தைப் பெற்று வருகிறது. அந்த வகையில் அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் ராதே ஷ்யாம், ஆதி புரூஸ் போன்ற படங்கள் ரெடியாகிக் கொண்டிருக்கின்றன.

இதில் ராதே ஷ்யாம் மற்றும் ஆதி புரூஸ் ஆகிய இரண்டு படங்களுமே கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. அதனை தொடர்ந்து கேஜிஎப் என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த பிரசாந்த் நீல் என்ற இயக்குனருடன் இணைந்து சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பயங்கர அடிதடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இந்தப் படமும் கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறதாம். மேலும் இந்த படத்தில் முதன்முதலாக பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார்.

அதிரடி படங்களுக்கு வில்லன் கதாபாத்திரங்கள் எப்பவுமே முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில் சலார் படத்தில் முதலில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்தார்களாம்.

ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது கன்னட சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் மது குருசாமி என்பவர் வில்லனாக ஒப்பந்தமாகியுள்ளாராம்.

salaar-villain-mathugurusamy
salaar-villain-mathugurusamy

இதனை அவரே தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். கேஜிஎப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கே ஜி எஃப் 2 படம் விரைவில் வெளியாக உள்ளது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

Trending News