ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 16, 2025

கைவிட்டாரா கமல்? பிரபல முன்னணி நடிகருடன் அவசரஅவசரமாக கூட்டணி போடும் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் அரசியல் பிரபலமாகவும் ஒரே நேரத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் கமலஹாசன் கடைசி நேரத்தில் சொதப்பியதால் லோகேஷ் கனகராஜ் தற்போது வேறு ஒரு நடிகருடன் கை கோர்க்க உள்ளாராம்.

தமிழ் சினிமாவின் ஆல் டைம் டாப் நடிகர்களில் மிக முக்கியமானவர் உலகநாயகன் கமலஹாசன். கடந்த சில வருடங்களாகவே கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவு ரசிகர்களை கவரவில்லை. பாபநாசம் படம் மட்டுமே வெற்றி பெற்றது.

இதற்கிடையில் திடீரென அரசியலில் நுழைந்து மக்கள் நீதி மையம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இன்னும் சில மாதங்களில் எலக்சன் வரப்போவதால் அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி விட்டாராம் கமலஹாசன்.

இதனால் கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்து பணியாற்ற இருந்த விக்ரம் என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது தற்காலிகமாக ஒரு ஆறு மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

lokesh-kamal-cinemapettai
lokesh-kamal-cinemapettai

இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் வெகுவேகமாக விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மாஸ்டர் படத்தில் பவானி கதாபாத்திரம் விஜய்சேதுபதியை உலக அளவில் பிரபலப்படுத்தி விட்டதால் லோகேஷ் கனகராஜை பயன்படுத்தி ஹீரோவாகவும் வேற லெவல் ஹிட் கொடுக்க முடிவு செய்துள்ளாராம்.

அரசல் புரசலாக தற்போது இந்த செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. தளபதி விஜய் தற்போது தளபதி65 படத்தில் மாட்டி கொண்டதால் லோகேஷ் கனகராஜூடன் உடனடியாக கூட்டணி அமைக்க முடியாமல் போனதை நினைத்து கொஞ்சம் வருத்தத்தில் உள்ளாராம்.

Trending News