சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அஜித்தை போல் தேடிப்போய் உதவி செய்யும் கவுண்டமணியின் மகள்.. உணர்ச்சிவசப்பட்டு உண்மையை சொன்ன பிரபலம்

தமிழ் சினிமாவில் காமெடியன் ஜாம்பவானாக விளங்குபவர் கவுண்டமணி. இவரது நடிப்பில் வெளியான காமெடி காட்சிகள் அனைத்தும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது.

கவுண்டமணி மற்றும் செந்தில் நடிப்பில் கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற வாழைப்பழ காமெடி எத்தனை ஆண்டுகளை கடந்தும் இன்றும் ரசிகர்களை சிரிக்க வைத்து தான் வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் சேர்ந்து உருவான காமெடிகள் அனைத்தும் தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்துள்ளது. சமீபகாலமாக கவுண்டமணி மகள் மற்றும் மருமகள் அடிக்கடி புற்றுநோய் மருத்துவமனைக்கு நன்கொடை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

goundamani
goundamani

சமீபத்தில் இவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு சென்று நன்கொடை கொடுத்துள்ளனர். அதனை கவுண்டமணி நண்பரான பயில்வான் நேரில் பார்த்துள்ளார். அதனைப் பார்த்த இவர்கள் தயவுசெய்து நாங்கள் நன்கொடை செய்ததை யாரிடமும் சொல்லாதீர்கள் என்று கேட்டுள்ளனர். புகைப்படத்தில் இருப்பது கவுண்டமணியின் மகள்.

அஜித்தை போல் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாது என்பது போன்று தற்போது உதவி செய்து வருகிறார் கவுண்டமணியின் மகள். இதற்குக் காரணம் நெருங்கிய உறவுகள் யாராவது புற்றுநோய்யால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் அதன் விளைவு தற்போது உதவும் மன நிம்மதி கொடுத்துள்ளது.

goundamani-daughter
goundamani-daughter

ஆனால் ஏதோ ஒரு உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் செய்யும் இந்த நல்ல செயலை இவ்வுலகிற்கு வெளிக் கொண்டு வந்து விட்டேன் என அவரது நண்பர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Trending News