தமிழ் சினிமாவில் கண்மணி இயக்கத்தில் வெளியான ஹாரர் காமெடி படம்தான் ‘பேய்கள் ஜாக்கிரதை’. இந்த படத்தில் ஜீவரத்தினம், தம்பி ராமையா, மனோபாலா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி இருந்தவர்தான் ஹிந்தி நடிகையான கெஹனா வசிஸ்த். இவர் இந்தியில் பல படங்களில் நடித்ததோடு, சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். அதுமட்டுமில்லாமல், தெலுங்கில் சில படங்களிலும் ஹிந்தி டிவி சீரியல்களிலும், வெப் சீரியல்களிலும், பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் கெஹனா வசிஸ்த் தற்போது ஆபாச பட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது மிஸ் ஆசிய பிகினி டைட்டில் வின்னர் ஆன கெஹனா, ஆபாச படங்களை பதிவேற்றுவதற்காகவே தனி ஆன்லைன் சேனல் ஒன்றை தொடங்கியிருக்கிறாராம். அதே போன்று இதில் உள்ள வீடியோக்களை பார்க்க ரூபாய் இரண்டாயிரம் கட்டணம் செலுத்தி சந்தாதாரராக வேண்டும் என்ற கண்டிஷனையும் போட்டுள்ளார்.
இந்த சேனலுக்கு சிலருடன் சேர்ந்து, தனி பங்களா ஒன்றில் ஆபாச படங்களை கெஹனா தயாரித்துள்ளார். இதுதொடர்பாக தான் நடிகை கெஹனா வசிஸ்த்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் விசாரணையின்போது இதுவரை 85-க்கு மேல் ஆபாச வீடியோக்களை தயாரித்து யூடியூப் சேனலில் பதிவேற்றி உள்ளது தெரியவந்திருக்கிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், சில மாடல்கள் கைது செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
எனவே, ஆபாச பட விவகாரத்தில் நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.