சேரன் முதல் முதலாக ஹீரோவாக பெரிய வெற்றி கொடுத்த திரைப்படம் தான் ஆட்டோகிராப். அந்த படத்தை எழுதி இயக்கி வரும் சேரன் தான். எதிர்பார்க்காத வகையில் ஆட்டோகிராப் திரைப்படம் அதிரி புதிரி வெற்றியை பெற்றது.
முதலில் ஆட்டோகிராப் படத்தில் விஜய் நடிக்கவிருந்த செய்திகள் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்பே ஆட்டோகிராப் படத்தை அப்போது மார்க்கெட்டில் இருந்த இரண்டு முக்கிய முன்னணி நடிகர்கள் ரிஜக்ட் செய்து விட்டார்களாம்.
ஆட்டோகிராப் படத்தின் வெற்றிக்குப் பிறகுதான் மலையாள பெண்கள் மீது தமிழக ரசிகர்களுக்கு அதிக அளவில் ஈர்ப்பு ஏற்பட்டது என்பதே நிதர்சனமான உண்மை. அதுவும் கோபிகா மீது ரசிகர்கள் வெறித்தனமான அன்பு வைத்திருந்தனர்.
முதல் முதலில் ஆட்டோகிராப் படக் கதையை சேரன் பிரபல நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவிடம் கூறினாராம். ஆனால் முழுக்கதையையும் கேட்ட பின்னர் பிரபுதேவா வேறு ஒரு பட வாய்ப்பு கிடைத்ததால் சென்றுவிட்டாராம்.
அதன் பிறகு அந்த கதையை தூக்கி கொண்டு சீயான் விக்ரமிடம் சென்றுள்ளார். விக்ரமும் ஆட்டோகிராப் படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்த நிலையில் எதிர்பார்க்காத விதமாக விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படம் மாஸ் ஹிட் அடித்ததால் இப்போது ஆட்டோகிராப் படம் செய்தால் சரியாக இருக்காது என விலகிக் கொண்டாராம்.
அதன் பிறகுதான் விஜய்யிடம் கதை சொன்னதாகவும், அது கைகூடி வராததால் என்ன நடந்தாலும் பரவாயில்லை என தானே ஹீரோவாக அறிமுகமானதாகவும் சேரன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆட்டோகிராப் படத்தில் உங்களைக் கவர்ந்த விஷயத்தை கமெண்டில் பதிவு செய்யலாம்.