சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சொந்த காசில் பேனர் வைத்துக் கொண்ட ரம்யா பாண்டியன்.. டோடலா டேமேஜ் செய்த ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் ரம்யா பாண்டியன். ஏற்கனவே ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ்  தான் இவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது.

அதுமட்டுமில்லாமல், ரம்யா பாண்டியன் எடுத்த இடுப்பு போட்டோஷூட் ரம்யாவை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றது. இதனைத் தொடர்ந்து ரசிகர்களை கிளுகிளுப்பாக்கும் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ரம்யா.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிநாள் வரை இருந்து சிங்கப் பெண் என்ற அடையாளத்துடன் வெளியேறினார் ரம்யா. தற்போது சூர்யா தயாரித்து வரும் படத்தில் கமிட்டாகி, பிசியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ் கொண்டாட்டம்’ என்ற நிகழ்ச்சியின்போது, ரம்யா பாண்டியனுக்கு அவருடைய ரசிகர்கள் கட் அவுட் வைத்து, மாலை அணிவித்து, பால் அபிஷேகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் புகைப்படத்தை ரம்யா சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்ய, தற்போது அது நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலர், ‘இந்த சிங்க பெண் அப்படி என்ன செஞ்சாங்க’ என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலரோ, பணம் இருப்பதால் சொந்தக் காசில் ரம்யா பாண்டியன் விளம்பரம் செய்வதாக தெரிவித்து வருகின்றனர்.

எனவே, இந்த சின்ன கட் அவுட் விஷயம் தற்போது ரம்யாவின் இமேஜை டேமேஜ் செய்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர் ரம்யாவின் ரசிகர்கள்.

Trending News