அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்ற திரைப்படம் என்னை அறிந்தால். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு திரிஷா ரி என்ட்ரி கொடுத்தார்.
இந்த படத்தில் திரிஷா, அனுஷ்கா, அணிகா மற்றும் பார்வதி நாயர் போன்ற பல நடிகைகள் நடித்துள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அருவி படத்தில் நடித்த அதிதி பாலன் என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ள தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த படத்தில் திரிஷா தோழியாக அருவி பட நடிகை நடித்துள்ளார். குறிப்பாக த்ரிஷாவுடன் காதல் வசம் ஏற்பட்டு அஜித் திரிஷா பரதநாட்டியம் நடனமாடும் இடத்திற்கு வருவார். அப்போது திரிஷாவுடன் சக தோழியாக அதிதி பாலன் பரதநாட்டியம் நடனம் ஆடுவார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அஜித் படத்தில் அப்போதே அதிதி பாலன் நடித்துள்ளார் என்பது இதுவரை நமக்கு தெரியாமல் போயிருச்சே என ஆச்சரியத்தில் உள்ளனர்.
சமீபத்தில் கூட அருவி பட நடிகை நடித்த குட்டி ஸ்டோரி திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில் சுமாரான வெற்றியை மட்டுமே பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.