லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பது வினோத் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் வலிமை படம் தான்.
தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜீத் மற்றும் விஜய்யின் அடுத்தடுத்த படங்களை இயக்கும் இளம் இயக்குனர்கள் இவர்கள்தான். அஜித் மற்றும் விஜய் இருவருமே இனி இளம் இயக்குனர்களுடன் பயணம் செய்வது என முடிவெடுத்துள்ளனர்.
அந்த வகையில் ஏற்கனவே வினோத் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை எனும் படத்தை கொடுத்தார். இருந்தாலும் அது ஒரு ரீமேக் படம் என்பதால் வினோத்தின் வேல்யூ ரசிகர்களுக்கு தெரியாமல் போய்விட்டது.
இருந்தாலும் நேர்கொண்டபார்வை படத்தில் அவர் வைத்திருந்த ஒரு சண்டைக்காட்சியே வினோத் யார் என்பதை அனைவருக்கும் ஞாபகப்படுத்தியிருக்கும். அப்படியே இந்த பக்கம் எடுத்துக்கொண்டால் விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் கொடுத்தார் மாஸ்டர் படம் தான்.
இதுவரை இல்லாத அளவுக்கு விஜய்யின் கதாபாத்திரம் சூப்பராக இருந்தது. ஆனால் மாஸ்டர் படமும் லோகேஷ் கனகராஜின் 100% படம் இல்லை. விஜய்க்காக கதையில் சமரசம் செய்ததால் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இனி லோகேஷ் கனகராஜ் மற்றும் வினோத் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படங்கள் அனைத்துமே இருவரின் நூறு சதவிகிதம் படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் வினோத்தை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த புகைப்படம் காட்டு தீயை விட வேகமாக தல தளபதி ரசிகர்கள் இடையே வைரல் ஆகி விட்டது.