சிறுத்தை படத்தின் மூலம் கமர்சியல் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிறுத்தை சிவா. அதற்கு முன்பே சில தெலுங்கு படங்களை இயக்கியுள்ளார். மேலும் ஆரம்ப காலகட்டங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் படங்களில் நடித்தும் இருக்கிறார்.
சிறுத்தை படத்தின் வெற்றிக்குப் பிறகு தல அஜித்தை வைத்து வீரம் எனும் படத்தை கொடுத்தார். மாஸ் ஹிட்டடித்த பிறகு மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் வேதாளம், விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்தார்.
அஜித்துடன் தொடர்ந்து நான்கு படங்களில் பணியாற்றியவர்கள் சிறுத்தை சிவா மட்டும்தான். இவர்கள் கூட்டணியில் விவேகம் படத்தை தவிர மற்ற அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஐந்தாவது முறையாக தல அஜித் தனக்கு வாய்ப்பு கொடுப்பார் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார் சிறுத்தை சிவா. தற்போது அண்ணாத்த படத்தில் பிசியாக இருக்கும் சிறுத்தை சிவா அந்த படத்தை முடித்த பிறகு தல 61 படத்தை இயக்குவதாக இருந்தாராம்.
இது சார்பாக தல அஜித்தும் சில நாட்களுக்கு முன்பு பச்சைக்கொடி காட்டியதாக கூறுகின்றனர். ஆனால் தற்போது வலிமை படத்தை பார்த்துவிட்டு தொடர்ந்து வினோத்துக்கு வாய்ப்பு கொடுப்பதாக முடிவு செய்துள்ளாராம்.
இதனால் சிறுத்தை சிவா அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது. அண்ணாத்த படத்திற்கு பிறகு தல 61 படத்தில் பணியாற்றலாம் என நினைத்த சிறுத்தை சிவாவுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாம்.