ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அஜித் 7 லட்சம் ஏமாற்றியதாக குற்றம்சாட்டிய தயாரிப்பாளர்.. தல கொடுத்த தரமான பதிலடி

சமீபத்தில் தமிழ் சினிமாவின் முன்னாள் தயாரிப்பாளர் ஒருவர் தல அஜித் தன்னிடம் 7 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டிய செய்தி கோலிவுட் வட்டாரங்களில் கொழுந்து விட்டு எரிந்தது.

இதை காரணம் காட்டி தல அஜித்தை பிடிக்காதவர்கள் தொடர்ந்து அஜித்தை தாக்கிய படி கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர். மேலும் அஜித் அப்படியெல்லாம் செய்ய மாட்டார் எனவும் சில அஜித்துக்கு சப்போர்ட் செய்து வந்தனர்.

செவன்த் சேனல் ஸ்டுடியோ தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் என்பவர் தல அஜீத்துக்கு அவருடைய ஆரம்ப காலகட்டங்களில் கிட்டத்தட்ட 15 லட்சம் வரை கடன் கொடுத்ததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதில் 7 லட்சத்தை மட்டும் அஜித் இன்னும் திருப்பி தரவில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது எனவும் விரைவில் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் வளைத்து வளைத்து சேனலுக்கு பேட்டி கொடுத்து வந்தார் மாணிக்கம் நாராயணன்.

இதைக் கேள்விப்பட்ட தல அஜித் மிகவும் மனம் நொந்து விட்டாராம். மேலும் தன்னுடைய வட்டாரங்களில் வயதில் மூத்தவரான நாராயணன் எதற்காக தன் மீது இப்படி ஒரு குற்றம் சாட்டினார் என்பது தெரியவில்லை எனவும், அதற்காக அவர் மீது யாரும் கோபப்பட வேண்டாம் எனவும் கூறி விட்டாராம்.

thala-ajith-cinemapettai
thala-ajith-cinemapettai

மேலும் விரைவில் அவரை தனிமையில் அழைத்து என்ன விஷயம் எனக் கேட்க உள்ளாராம் தல அஜித். அதற்கான விடை தெரியும் வரை எனக்கு தூக்கம் வராது எனவும் தன்னுடைய வட்டாரங்களில் வருத்தத்தை பதிவு செய்துள்ளார் தல.

Trending News