தமிழ் சினிமாவில் வைகைப்புயல் என்ற கௌரவத்துடன் கொடிகட்டிப் பறந்த காமெடி நடிகர் தான் வடிவேலு. அப்படியிருந்த இவருக்கு சில வருடங்களாக படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
அதற்கு என்ன காரணம் என்று, நம் அனைவருக்கும் ஓரளவிற்கு தெரிந்த விஷயம் தான். இந்த சூழலில் சினிமாவில் நடிப்பதற்கு உடலில் தெம்பு இருந்தும், நடிக்க வாய்ப்புக் கிடைக்காமல் குமுறி கொண்டிருக்கிறார்.
தற்போது ஐஏஎஸ் அதிகாரிகள் உறுப்பினராக இருக்கும் நண்பன்டா வாட்ஸ்அப் குழுவில் கலந்துகொண்டு பேசிய வைகைப்புயல் வடிவேலு, ‘நீங்கள் எல்லோரும் ஒரு வருடம் தான் லாக் டவுன்ல இருக்கிறீங்க, ஆனால் நான் பத்து வருஷமா லாக் டவுன்ல இருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது எனக்கு மரண வேதனையை கொடுக்கிறது’ என்று கண்கலங்கி அழுதுள்ளார்.
அத்துடன் கர்ணன் படத்தில் இடம்பெறும், ‘சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா!’ என தன்னுடைய கனத்த குரலில் சோகத்தைக் வெளிப்படுத்தியது பார்ப்போரின் நெஞ்சை உலுக்கியது.
எனவே தமிழ் சினிமாவில் சூனா பானா, வீச்சருவா வீராசாமி, தீப்பொறி திருமுகம், நாய் சேகர், ஸ்நேக் பாபு என தான் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பெயரும் மக்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
தன்னுடைய உடல் அசைவு மற்றும் நடிப்பினால் நகைச்சுவையை வெளிப்படுத்திய வைகைப்புயல் வடிவேலுவின் தற்போதைய நிலை எப்போது மாறும் என்று அவருடைய ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.