கடந்த சில வாரங்களாக தென்னிந்தியா முழுவதும் உள்ள அனைத்து மீடியாக்களிலும் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் நெருங்கி காதலித்து வருவதாக வந்த வதந்திகள் காட்டுத் தீயை விட வேகமாக பரவ ஆரம்பித்தன.
என்ன ஏது என்று யோசிப்பதற்குள் இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி விட்டதாக ரசிகர்கள் நினைத்தனர். இதனால் கீர்த்தி சுரேஷ் தரப்பு மிகவும் அப்செட்டில் உள்ளதாம். சமீபத்தில்கூட கீர்த்தி சுரேஷ் தந்தை இதெல்லாம் பொய்யான செய்தி என குறிப்பிட்டிருந்தார்.
இருந்தாலும் சினிமாக்காரர்கள் வெளியில் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்பதை போல இருவரும் காதலித்து வருவது உண்மைதான் என மீண்டும் மீண்டும் அந்த விஷயத்தையே கிளறி கொண்டிருந்தனர்.
இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என கீர்த்தி சுரேஷ் அதிரடியாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூசகமாக இந்த சர்ச்சைக்கு பதிலடி கொடுத்துள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கீர்த்தி சுரேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது அம்மா நடிகை மேனகா, கீர்த்தி சுரேஷுக்கு மருதாணி வைத்து விடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, இது தான் உண்மையான காதல் என தெரிவித்திருந்தார்.
இதன்மூலம் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாக கிளம்பிய சர்ச்சைக்கு சத்தமில்லாமல் முற்றுப்புள்ளி வைத்ததாக கூறுகின்றனர். அனிருத் விஷயத்தில் எந்த பெண்களின் பெயர் அடிபட்டாலும் அவர்களது கேரியர் எவ்வளவு டேமேஜ் ஆகும் என்பதை ஆண்ட்ரியாவை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும்.
அதனால்தான் கீர்த்தி சுரேஷ் உஷாராக தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பதற்கு சான்றாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய கேரியரை காப்பாற்றிக் கொண்டுள்ளார் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.