வெள்ளி திரையைக் காட்டிலும் சின்னத்திரை நடிகர், நடிகர்கள் எளிதில் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுவார்கள். ஏனென்றால் அனுதினமும் அவர்களை பார்ப்பதால்தான்.
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் தொடர்ந்து இரண்டு சீரியல்களில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக சேர்ந்து நடித்ததால், அவர்களை ரியல் ஜோடியாக பார்க்க ரசிகர்கள் பெரிதும் ஆசைப்பட்டனர்.
அந்த அளவிற்க்கு இருவருக்கும் நல்லாவே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. இந்நிலையில் கதாநாயகி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக, அதைத்தொடர்ந்து கதாநாயகனுக்கு முன்னாள் திருமணத்தில் இருந்து விவாகரத்து கிடைத்ததால், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர் என கிசுகிசுக்கப்பட்டது.
அதன் விளைவாக தற்போது, அந்த வதந்திக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கதாநாயகன் பரபரப்பான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘நான் ஒரு டிவோர்ஸி. சில தினங்களுக்கு முன்புதான் விவாகரத்து கிடைத்தது. அதன்பின் நான் இன்னொரு பிரபலத்தை திருமணம் செய்து கொள்வேன் என்று புரளியை கிளப்பி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் நாங்கள் இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சமூகவலைதளங்களில் பரவி வரும் செய்தி உண்மையல்ல.
எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. நாங்கள் தொழில் ரீதியாக மட்டுமே தொடர்பில் உள்ளோம். ஆகையால் அந்தப் பெண்ணையும், என்னையும் நிம்மதியாக வாழ விடுங்கள்’ என்று கோபத்துடன் பேட்டியளித்துள்ளார்.