இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் சங்கர் தற்போது அடுத்தடுத்து தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் படங்கள் இயக்கப்போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
முதலில் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார் கமல். ஆனால் படம் நினைத்தபடி சரியாக செல்லவில்லை. படப்பிடிப்பிலேயே ஆயிரத்தெட்டு பஞ்சாயத்து. இதனால் செம அப்செட்டில் இருந்தாராம் சங்கர்.
இதற்கிடையில்தான் தெலுங்கு சினிமாவில் இருந்து ஒரு ஆஃபர் வந்துள்ளது. தற்போது அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.
அந்த படத்தை தொடர்ந்து நேரடியாக பாலிவுட்டில் ரன்வீர் சிங் என்பவருடன் இணைந்து நேரடி பாலிவுட் படத்தை இயக்க வேலைகள் செய்து வருகிறாராம் ஷங்கர். இதனால் அடுத்த 5 வருடங்களுக்கு தமிழ் சினிமா பக்கம் சங்கர் திரும்ப மாட்டார் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
ஏற்கனவே ஷங்கர் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களை வைத்து படம் இயக்க மாட்டேன் என அவரது தரப்பில் கூறியதாக செய்திகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து அஜித், விஜய் ஆகியோருடன் இணைவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தற்போது தமிழ் சினிமாவுக்கே முழுக்கு போட்டுவிட்டு தெலுங்கு பாலிவுட் பக்கம் போன சங்கருக்கு தமிழ் ரசிகர்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தற்போது அண்டை மாநிலங்களை நம்பி செல்லும் சங்கர் அங்கு தன்னுடைய வெற்றிக் கொடியை நாட்டுவாரா, இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.