நீண்ட மாதங்களாக முடங்கிக் கிடந்த தியேட்டர் தொழில்களை மீட்டெடுத்த பெருமை விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தையே சேரும். திரையரங்குகளுக்கு மக்கள் வருவார்களா? மாட்டார்களா? என்ற குழப்பத்தில் வெளியான மாஸ்டர் படத்தை பார்க்க குடும்பம் குடும்பமாக தியேட்டரை நோக்கி படையெடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து அமேசான் தளத்தில் வெளியான மாஸ்டர் படம் அங்கேயும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் மாஸ்டர் படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது.
குறிப்பாக விஜய் சேதுபதி நடித்த பவானி கதாபாத்திரம் இன்று பாலிவுட் நடிகர்கள் புகழ்ந்து பேசும் அளவுக்கு சிறப்பாக இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிஸியாக தொடங்கிவிட்டார் விஜய் சேதுபதி.
இந்நிலையில் சமீபத்தில் தியேட்டரில் வெளியாகப் போவதாக அறிவித்த ஹிந்தி படம் ஒன்று திடீரென அந்த முடிவை ரத்து செய்து நேரடியாக ஓடிடி தளத்திற்கு சென்றது அங்கே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஊரடங்கு சமயத்தில் பிரபலமான லூடோ விளையாட்டை மையமாக வைத்து உருவான லூடோ திரைப்படம் முதலில் தியேட்டர் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. தற்போது அதிலிருந்து பின்வாங்கி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகப் போவதாக அறிவித்தனர்.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் அனுராக் பாசு என்பவர், தென்னிந்தியாவில் மாஸ்டர் படம் எப்படி ஒரு மேஜிக் நிகழ்த்தியதோ அதேபோல் ஹிந்தியிலும் ஒரு படம் வரவேண்டும். அப்போது தான் ரசிகர்கள் தியேட்டரை நோக்கி வருவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். மாஸ்டர் படத்தின் வரவேற்பை பார்த்து பாலிவுட் சினிமாவே மிரண்டுபோயுள்ளது விஜய் ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது.