தற்போதெல்லாம் பாலியல் வன்கொடுமைகள் தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் தலைதூக்கிய ஆடிக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக சினிமா உலகில் நடக்கும் அவலங்களை கணக்கில் அடக்க முடியவில்லை.
அந்த அளவிற்கு எல்லையின்றி அட்டூழியங்கள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில் தற்போது தமிழ் நடிகையான சமீரா தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை பற்றி போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதாவது தமிழ் சினிமாவில் வஜ்ரம், எதிராளி, வென்று வருவான் ஆகிய படங்களின் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சமீரா. இவர் தனியார் பொறியியல் கல்லூரி அதிபரான கோவிந்தராஜ் என்பவர் பாலியல் அத்துமீறல் செய்ததாக போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அந்தப் புகாரில் சமீரா, கோவிந்தராஜ் என்பவர் தான் எடுக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க அணுகியதாகவும், புதுச்சேரியில் குளிர்பானத்தில் போதை மாத்திரை கலந்து கொடுத்து தன்னிடம் அத்துமீறியதாகவும்,
அதை வீடியோ எடுத்து வைத்து, 7 ஆண்டுகளாக சமீராவை மிரட்டியதோடு பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்திருக்கிறார். மேலும் இதற்கு சமீரா ஒப்புதல் தெரிவிக்காததால், கோவிந்தராஜ் பலமுறை கொலை மிரட்டலும் விட்டு இருக்கிறாராம்.
இதையும் அந்த புகாரில் தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார் சமீரா. அதேபோல் சமீரா வீட்டிற்கு எட்டு பேர் கொண்ட கும்பல் வந்து, அவரை மிரட்டியதாகவும் சமீரா போலீசாரை அவசர எண் மூலம் தொடர்பு கொண்டதால் தான் அவரை மீட்க முடிந்தது என்றும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்துதான் போலீசார், அந்தக் கும்பலையும் கோவிந்தராஜ்-ஐயும் கைது செய்துள்ளனராம். இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.