செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

36 வருடங்களுக்கு முன்பே பங்களாவை எழுதிக் கொடுத்த ரஜினிகாந்த்.. அப்ப வாடகை கொடுக்க முடியலனா எப்படி.?

ரஜினிகாந்த் 45 வருட சினிமா வாழ்க்கையில் பல கஷ்டங்கள் மற்றும் பல தடைகளை கடந்து வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய கடின உழைப்பாலும் படங்களில் வெற்றிகண்டு தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்தார்.

ஆரம்ப காலத்தில் ரஜினியின் வெற்றிப் படிக்கட்டுகளில் நிறையபேர் தடுக்க பார்த்தனர். ஆனால் தொடர்ந்து படங்களில் நடித்து வெற்றி கண்டார். கை கொடுக்கும் கை படத்திற்கு சம்பளமாக ரஜினிகாந்திற்கு வேளச்சேரியில் பங்களா கொடுக்கப்பட்டது. பின்பு அந்த பங்களாவை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா எனும் ட்ரஸ்டுக்கு எழுதிக் கொடுத்துவிட்டார்.

பின்பு சாமியாராக செல்ல இருந்த ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களுக்காக மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தினார்.

rajinikanth-cinemapettai
rajinikanth-cinemapettai

கிண்டி ரைன் கோர்ஸ் பகுதியிலுள்ள ரஜினிகாந்துக்கு சொந்தமான ஆசிரமம் பள்ளிக்கூடம் சில வருடங்களுக்கு முன்பு வாடகை தர முடியாமல் இருந்த விஷயம் தமிழ் நாட்டிலேயே பெரிய பிரச்சனையாக பார்க்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் பல கோடி ரூபாய் வாடகை தராமல் ஏமாற்றியதாக அந்த இடத்தின் உரிமையாளர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால் அதற்கு லதா ரஜினிகாந்த் பள்ளியின் உரிமையாளர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். தொடர்ந்து வாடகை தரப்பட்டு தான் வருகிறது என அனைவர் முன்னிலையிலும் தெரிவித்தார்.

அது மட்டுமில்லாமல் அந்த ஆசிரமம் பள்ளிக்கூடத்தின் நில உரிமையாளர் தந்தைக்கும் அவரது மகனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் யாருக்கு வாடகை தருவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது தவிர லதா ரஜினிகாந்த் வாடகை செலுத்தாமல் இருந்ததில்லை என்பது 2017 ஆம் ஆண்டு அனைத்து தரப்பிலும் தகவல் வெளியாகியது.

ஆனால் ஒரு சிலர் தவறாக செய்திகளை பரப்பி லதா ரஜினிகாந்துக்கு கலங்கம் ஏற்படுத்தினர். சில வருடங்களுக்கு முன்பு வாடகை தராமல் இருந்த ஆசிரமத்தைப் பற்றியும் பல வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் ஒரு ஆசிரமத்தை எழுதிக் கொடுத்தது பற்றியும் ஒப்பிட்டு பல வருடங்களுக்கு முன் வெளியான தகவலை வைத்து தற்போது செய்தி ஒன்றை பரப்பி வருகின்றனர்.

Trending News