முதல் முதலில் தமிழிலிருந்து மிகப்பெரிய நடிகர் படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது சூர்யாவின் சூரரைப் போற்று படம்தான். இது சம்பந்தமாக சூர்யா பல்வேறு பஞ்சாயத்துகளை சந்தித்தார். ஆனால் காலப்போக்கில் எல்லாம் மாறிவிட்டது.
சூர்யாவைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படமும் தியேட்டரில் வெளியாகி அடுத்த பதினைந்தாவது நாளில் அமேசான் தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதற்கும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.
இந்நிலையில் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜகமே தந்திரம் படமும் நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. ஆனால் இந்த முறை நடிகர் மீது எந்த தவறும் இல்லை. தயாரிப்பாளரின் குளறுபடியே இத்தனைக்கும் காரணம்.
தனுஷ் ஜகமே தந்திரம் படம் தியேட்டரில் தான் வெளியாக வேண்டும் என மிகவும் வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டார். ஆனால் தியேட்டரை விட நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நல்ல லாபம் கிடைத்ததால் தனுஷின் கோரிக்கையை மதிக்காமல் தயாரிப்பாளர் படத்தை தூக்கி கொடுத்து விட்டார்.
அதுவும் சும்மா இல்லை. சுமார் 55 கோடிக்கு ஜகமே தந்திரம் படம் விற்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு மொழிகளில் 190 நாடுகளுக்கு மேல் வெளியாக உள்ளதாம் ஜகமே தந்திரம். தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை விட 13 கோடி அதிகமாக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளதாம்.
சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் 42 கோடிக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தியேட்டரில் வெளியாகி மீண்டும் அமேசான் இணையதளத்தில் வெளியான மாஸ்டர் படம் 36 கோடிக்கு விற்பனையானது கூடுதல் தகவல். இதன் மூலம் நாளுக்கு நாள் தனுஷ் மார்க்கெட் உயர்ந்து கொண்டே செல்கிறது என்பது மட்டும் உறுதி.