ராஜ்கிரன் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே அவரது வாழ்க்கையில் வெற்றிப் படங்களாகவே உள்ளன. அந்த அளவிற்கு அவருடைய கதாபாத்திரம் அனைத்து படங்களிலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கும். இவரது நடிப்பில் வெளியான நந்தா, பாண்டவர் பூமி, சண்டக்கோழி ஆகிய படங்களுக்கு சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தமிழ்நாடு விருதை மூன்று முறை பெற்றுள்ளார்.
அந்த அளவிற்கு மற்ற நடிகர்களை போல் வருஷத்துக்கு 10 மற்றும் 15 படங்கள் நடிக்காமல் நல்ல கதாபாத்திரம் நல்ல கதையுள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து தற்போது வரை ராஜ்கிரண் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
ராஜ்கிரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல நடிகரை பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதாவது அந்தப் பிரபலம் வாய்ப்பு கேட்டு வரவில்லை தானாக முன்வந்து தான் வாய்ப்பு கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதாவது ராஜ்கிரன் ஒரு கல்யாணத்துக்கு போன இடத்தில் கல்யாணம் முடிந்த பின் அடுத்த நாள்தான் தனது ஊரில் செல்வதற்கு ரயில் இருந்துள்ளது. அதனால் அவரது ஊரில் இருந்த நண்பர்கள் ராஜ்கிரணின் பேச்சு துணைக்காக வடிவேலுவை அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போது வடிவேலு தனது இயல்பான நகைச்சுவை பேச்சால் ராஜ்கிரண் மனதை கவர்ந்தார். அதுமட்டுமில்லாமல் பொழுதுபோக்கிற்காக இவ்வள அழகா சிரிக்க வைக்கிறார். பட வாய்ப்பு கொடுத்தால் பலரையும் சிரிக்க வைப்பார் என எதிர்பார்த்து அவரை ராசாவின் மனசிலே படத்தில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக ராஜ்கிரண் இருந்ததால் கஸ்தூரி ராஜா இயக்குனரிடம் வடிவேலுக்கு வாய்ப்பு தருமாறு கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அந்த படத்தில் வடிவேலு பேசும் அண்ணா “படாத இடத்தில் பற்றபோது” என்ற வசனம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.
சினிமாவிலேயே ஒரு காலத்தில் கலக்கிக் கொண்டிருந்த வடிவேலு கட்சிகளில் சேர்ந்து பிரச்சாரம் செய்வதாக விஜயகாந்த் ரசிகர்களை விரோதிகளாக உருவாக்கிக் கொண்டார். அதுமட்டுமில்லாமல் தனது வாய் பேச்சாலும் தொடர்ந்து பல இயக்குனர்களிடம் முரண்பாடு ஏற்பட்டதால் பல தயாரிப்பாளர்களும் இவரை சினிமாவை விட்டே ஒதுக்கி வைத்தனர்.
ஷங்கர் தயாரிப்பில் 24 ஆம் புலிகேசி என்ற படத்தில் நடிப்பதாக கூறி இரண்டு கோடி வரை பணம் வாங்கியுள்ளார் வடிவேலு. 10 கோடி வரை படப்பிடிப்புக்கான செட்டப் போடப்பட்டு பின் நடிக்கவில்லையாம். இதனால் இயக்குனர் ஷங்கர் ரெக்கார்ட் கொடுத்துள்ளார் அதனால் தற்போது வரை சினிமாவில் தள்ளாடி வருகிறார்.
பத்து வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடிக்காமல் இருந்த வடிவேலு தற்போது தான் பிரபல நடிகரின் படத்தில் நடிப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த முறையாவது தனது வாய்ப்பை தக்க வைத்து வாழ்க்கையில் பல படங்கள் நடிப்பாரா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.